Well, going back to Taiwan for about two weeks. I don’t think i’ll be able to post anything until i get back to Cyprus. (As if i’m posting regularly from Cyprus!!!)
Until then take care and see you soon !!! (See you Soon, sounds like a chinese name isn’t it?)
June 13, 2005
Out for two weeks
June 10, 2005
June 8, 2005
June 5, 2005
என்ன பாட்டு? என்ன சம்பவம்?
அப்பாடி!!! சைப்ரஸ் திரும்பி வந்த அசதியா இல்ல நான் பண்ண சாம்பாரா-ன்னு தெரியல!!! சோம்பேறித்தனம் ![]()
எழுதாத குறையை நிவர்த்தி பண்ண இதோ ஒரு போஸ்ட்.
எதேச்சையா கேட்கும் ஒரு சினிமா பாடல், சடார்னு ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவுபடுத்தி இருக்கா?. எனக்கு நிறைய நினைவுபடுத்தி இருக்கு.
நம்மையே அறியாமல் நாம் கேட்கும் பாடல்கள் அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களோட ஒன்றி அடிமனசுல தேங்கி போறதும், திரும்ப எப்பவாவது அதே பாடல் கேட்கும் போது, அந்த நினைவுகளை தோண்டி எடுக்கிறதும், ஒரு இனிமையான அனுபவமே.
“கடவுள் உள்ளமே” பாட்டு, அன்புள்ள ரஜினி மீனா-வுக்காக நான் அன்னிக்கி அழுதத இன்றைக்கும் நினைவூட்டுகிறது.
“இன்னிசை பாடி வரும் – துள்ளாத மனமும் துள்ளும் பட பாடல்” இன்னிக்கும் என் அக்காவின் திருமண விழாக் கோலத்தை என் கண் முன் நிறுத்துகிறது.
தெனாலி மற்றும் ரிதம் பட பாடல்கள் – என் அமெரிக்க முதல் பயணத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது.
இது போல இன்னும் எத்தனையோ பாடல்கள சொல்லலாம்.
அப்ப உங்களுக்கு? என்ன பாட்டு? என்ன சம்பவம்?





