demigod

May 13, 2006

கொட்றாங்கோ! கொட்றாங்கோ!!!

Filed under: Stories, Tamil — demigod @ 10:31 pm

– தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் மாதாந்திரப் போட்டி ஏப்ரல் – மே 2006-க்காக –

நேரம் இரவு 9:27:39 மணி. மொபைலன், அவன் மனைவி டேட்டாதரணி, 3 வயது மகன் ப்ளாக்கர்234512312344…4423678989, தந்தை விஜய் அனைவரும் அவர்களது வீட்டு செய்தி அறையில் அமர்ந்து, அறையின் 4 சுவர்களில் ஒரு சுவரைப் பார்த்துக் கொண்டிருக்க, சுவர் முழுவதும் 24 கட்டங்களாக, பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நிகழ்ச்சியென 24 கட்டங்களும் அன்றைய நிகழ்ச்சிகளை நேரடியாக செயற்கைகோளிலிருந்து உள் வாங்கி, வெளிபரப்பி கொண்டு இருந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க, மொபைலனின் பையன் அவன் பக்கம் திரும்பினான்,

“அப்பா, கலர் டிவி-ன்னா என்னாப்பா?”

“கலர் டிவி-யா?” – மொபைலன் அவங்க அப்பா விஜய் பக்கம் திரும்பினான்.

விஜய், தன் பேரனை தூக்கி தன் மடி மீது வைத்துக் கொண்டார்.

“கலர் டிவி-ன்னாப்பா அது ஒரு பொட்டி மாதிரி இருக்கும். அத வெச்சு நீ இப்ப நியூஸ் பார்க்குர பாரு அத மாதிரி அந்த காலத்துல நாங்க எல்லாரும் நியூஸ் பார்ப்போம்”

“வேற என்ன எல்லாம் பண்ணலாம் தாத்தா, அத வெச்சு?”

“வேற என்ன பண்ணலாம்? ஆங்.. அத வெச்சு தேர்தல்ல கூட ஜெயிக்கலாம்.”

“அப்ப தாலின்னா என்ன தாத்தா?”

“தாலின்னா? இப்ப உங்க அம்மா கையில ஒரு சிப் வெச்சு தைச்சு இருக்காங்க இல்ல, அத மாதிரி உங்க பாட்டி அந்த காலத்துல மஞ்ச கலர்ல, கழுத்துல மாட்டி இருந்தாங்க?.
அப்ப எல்லாம் அது இருந்தாதான், ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பு. அத வெச்சு நாங்க எவ்வளவு சினிமா எடுத்து இருப்போம் தெரியுமா?. அத கழுத்துல மாட்டினா, கயட்டவே கூடாது, ஆனா மணி சார் எடுக்கிற சினிமால மட்டும்தான், கழட்டி காமிப்பாங்க.”

“ஓ, அத வெச்சுக் கூட தேர்தல்ல ஜெயிக்கலாமா தாத்தா?”

“கண்டிப்பா, தாலி வெச்சு, தண்ணி அடிக்கலாம், சீட்டு ஆடலாம் என்ன வேனும்னாலும் பண்ணலாம். ஆனா கயட்டி மட்டும் வைக்க கூடாது,”

“அப்ப ரேஷன் கடைன்னா தாத்தா?”

“ரேஷன் கடைன்னா, நீ இப்ப இன்டெர்னெட்-ல ஷாப்பிங் பண்ற பாரு, அது மாதிரி ஒரு கடை, ஆனா அத தேர்தல் நேரத்துல மட்டும்தான் திறப்பாங்க?”

தொன தொனவென்று பேசிக்கொண்டிருந்த பையனைப் பார்த்து, மொபைலன் கேட்டான்.

“எப்படிடா, உனக்கு இந்த விசயமெல்லாம், தெரியும்?”

“தேர்தல் 2060, காம்பெயின் பார்த்தேன்ப்பா”.

“அவன் சொல்லி முடிக்கவும், 23ம் கட்டத்துல, “அம்மி அம்மி மிதிக்க” பாட்டு முடியவும் சரியா இருந்தது”. அவன் அம்மா, அவனிடம் திரும்பி, கேட்டாள்.

“டேய், நீ 2060 காம்பெயின் பார்த்தியா? யாருக்கு ஓட்டுப் போட்டா, இதெல்லாம் கிடைக்கும்டா?” – ஆவலுடன் கேட்டாள்.

“யாருக்குன்னும் இல்ல, நீ ஓட்டு போட்டாலே போதும்”

“என்னடா சொல்ற?, யாருதான் கொடுக்குறா இதெல்லாம்?”

“எலெக்சன் கமிஷன்” தான்.

4 Comments »

  1. A very nice one. Keep that coming in for the next month contests as well.

    Comment by thendral — May 14, 2006 @ 9:37 am

  2. interesting article. keep it up and all the best

    Comment by ஷீரீ — May 14, 2006 @ 4:16 pm

  3. good one🙂

    Comment by Hosmri — May 17, 2006 @ 3:51 pm

  4. Thanks everyone. Appuram.. vakkeduppu.. votu.. purinju irukkumnu ninaikirane.

    Comment by demigod — May 17, 2006 @ 6:17 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: